செய்திகள் :

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

post image

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியின் ஆதரவு பெற்ற கரூர் கம்பெனியைச் சேர்ந்த ஆள்கள் தான் இந்த செயலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. செந்தில் பாலாஜிக்கு சிறைக்கு சென்ற பிறகு கரூர் கம்பெனி குறித்த புகார்கள் பெரிய அளவில் எழவில்லை.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் கரூர் கம்பெனி ஆள்கள் மாத மாதம் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டுவதாக புகார் எழுந்தது. கோவையில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தான் கரூர் கம்பெனியின் மூளையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஈஸ்வரமூர்த்தி

பணம் கேட்டு மிரட்டியது  தொடர்பாக பார் உரிமையாளர்கள்,  ஈஸ்வரமூர்த்தியின் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் பார் உரிமையாளர்கள், ஈஸ்வரமூர்த்தியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து கோவை காந்திபுரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் சகுந்தலா, “எங்களுக்கு என்ன ஆனாலும் ஈஸ்வரமூர்த்தி தான் பொறுப்பு.

கோவை டாஸ்மாக் பார் பிரச்னை

ஏற்கெனவே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வியாபாரம் செய்கிறோம். மீண்டும் கட்சி பணம் என்று கேட்டால் நாங்கள் எங்கு செல்வோம். பணம் கொடுக்காதவர்களுக்கு காவல்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுத்து தொழில் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர்.” என்றார்.

இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தியின் ஆதரவாளர்கள், “அந்த பார் உரிமையாளர் தான் பணம் வாங்கிக் கொண்டு கொடுக்காமல் இருந்தார். அவர்கள் மீது பல்வேறு  புகார்கள் உள்ளன. அதைக் கேட்டதற்கு ஆள்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.” என்றனர்.

கோவை டாஸ்மாக் பார் பிரச்னை

இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தியின் ஆதரவாளரான பாலாஜி என்பரின்  புகாரில் சாய்பாபா காலனி காவல்துறையினர் பார் உரிமையாளர் கருப்புசாமி, அவரின் மனைவி சகுந்தலா மற்றும் அவருடன் அந்த அலுவலகத்துக்கு சென்று பிரச்னையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து நான்கு  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் ரீதியாக கொடுமைபடுத்திய தந்தை; எரித்துக் கொன்ற 'மகள்கள்' - பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தங்களது தந்தையை எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. லாகூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகல் சோக் என்ற இடத்தி... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'என் தற்கொலைக்கு காரணம் போலீஸ்'- கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாற்றுத்திறனாளி

மது விற்கச் சொல்லி தொந்தரவு அளித்ததாலும், தகாத வார்த்தைகளால் போலீஸ் திட்டியதாலும் மனம் உடைந்து தற்கொலை செய்வதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ராஜபாளைய... மேலும் பார்க்க

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி!

சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக... அவரின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அப்போது அங... மேலும் பார்க்க

மாளிகை கடை டு போதைப் பொருள் கடத்தல்; தனி சாம்ராஜ்யம் - யார் இந்த செந்தில்?

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவின் இன்ஸ... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்; கொலைசெய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்த கணவன் - டெல்லி `பகீர்'

டெல்லி ஜானக்புரியைச் சேர்ந்தவர் தன்ராஜ். வேலையில்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார். அதிக அளவில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த தன்ராஜ், பைக் ஓட்டுவதை ஒரு தொழிலாகச் செய்து வந்தார... மேலும் பார்க்க

`400% வட்டி, ரத்தினகல்; ஒரு லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி’ - உக்ரைன் ஓடிய நகைக்கடை உரிமையாளர்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்களது பணத்தை இழப்பது, இப்போதும் வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தாலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்ல... மேலும் பார்க்க