செய்திகள் :

கோவை : வழக்குப்பதிவு... இரவில் சாலை மறியல்; வெடிக்கும் பீப் கறி விவகாரம்

post image

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி - ஆபிதா தம்பதி தள்ளு வண்டியில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி என்பவர்,

சுப்பிரமணி

“இங்கு பீப் விற்பனை செய்யக் கூடாது” என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. கோயில் அருகே இருப்பதாலும், ஊர் கட்டுப்பாடு என்பதாலும் அங்கு பீப் கடை இயங்க அனுமதி இல்லை என்று சுப்பிரமணி கூறினார். 

இதற்கு ரவி – ஆபிதா தம்பதி, “அவர்கள் சொன்னதால் கடை போடும் இடத்தை மாற்றிவிட்டோம்.  ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார்கள். எங்களுக்கு தெரிந்த தொழிலை தான் நாங்கள் செய்ய முடியும். இதேபோல காவல்துறையும் மிரட்டுகிறார்கள்.” என்று கூறியிருந்தனர்.

ரவி - ஆபிதா

அவர்களுக்கு ஆதரவாக பெரியாரிய, இஸ்லாமிய அமைப்புகள் நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி மீது புகார் அளித்தனர். மேலும் பாஜக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து துடியலூர் காவல்துறையினர் சுப்பிரமணி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்தனர். இதைக் கண்டித்து பாஜக-வினர் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சுப்பிரமணி வீட்டின் உள்ளே சில நபர்கள் சென்று தகாத வார்த்தைகளில் பேசி பொருள்களை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

கோவை பீப் விவகாரம்
கோவை பீப் விவகாரம்

காவல்துறையினர் சுப்பிரமணி வீட்டில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கொலைசெய்யப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு; தண்டனை அனுபவித்த சகோதரர்கள் கூறுவதென்ன?

17 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.காணாமல் போன இவரைக் கொலை செய்ததாக இவரது உறவினர் மற்றும் மூன்று சகோதரர்கள் என 4 பேர் தண்டனை அனுபவித்துள்ளனர் என்ப... மேலும் பார்க்க

பல்லடம்: அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பாஜக தொண்டரிடம் ரூ.30,000 பிக்பாக்கெட்... போலீஸ் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வ... மேலும் பார்க்க

`எங்களை ஒண்ணும் பண்ண முடியாது!' - முதியவரைத் தாக்கிய மூவர்... திருச்சி அதிர்ச்சி!

திருச்சி, ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்ற சுமார் 70 வயது முதியவர் ஒருவரை இருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அரிவாளை காட்டியும... மேலும் பார்க்க

இளம்பெண்ணை குத்திக் கொலைசெய்த சக ஊழியர்; தடுக்க முயலாமல் வீடியோ எடுத்த மக்கள் - புனே அதிர்ச்சி!

புனே எரவாடாவில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தவர் சுபதா(28). இவர் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் கிருஷ்ணா என்பவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி இருக்கிறார். இப்பணத்தை கிருஷ்ணா கேட்டபோது கொடுக்காம... மேலும் பார்க்க

மணப்பாறை : `ரேஷன் கடை வேலை; எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி ரூ.6 லட்சம் பணம் வசூல் - எம்.எல்.ஏ சொல்வதென்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி பகுதியினைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், அருகேயுள்ள பிராம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நியாய விலைக் கடை உதவியாளர் பணி வாங்கி தர மணப்ப... மேலும் பார்க்க

நாக்கு பிளவு : `சிறையில் மனநல சிகிச்சை; இனி பாடி மாடிஃபிகேஷன்..!' - ஜாமீனில் வந்த இளைஞர்

திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய நாக்கு நுனியை பிளவுபடுத்தி அதில் ட... மேலும் பார்க்க