செய்திகள் :

கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது!

post image

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவருக்கு மன நல பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குஜராத்தைச் சேர்ந்த அந்த மாணவரின் பெயர் ஜிக்னேஷ்சிங் பர்மர்.

mail
g mail

காவலர்கள் கூறுவதன்படி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜிக்னேஷ்சிங் பர்மர், கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கு மெயிலை அனுப்பியுள்ளார்.

மத்திய காவல் துணை ஆணையர் எம். ஹர்ஷ வர்தன் கூறியதன்படி, "பர்மர் ஒரு இஞ்சினியரிங் மாணவர். அவருக்கு மன நல பிரச்னைகள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Delhi Police
Delhi Police

கம்பீருக்கு அனுப்பப்பட்ட மெயிலில் "நான் உன்னைக் கொல்வேன் ( I will kill You )" என்று எழுதியதுடன், தன்னை "ISIS Kashmir" என அடையாளப்படுத்தியுள்ளார்.

துணை காவல் ஆணையர், "கம்பீருக்கு ஏற்கெனவே காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியில் பேச முடியாது" எனக் கூறியுள்ளார்.

கம்பீருக்கு கொலை மிரட்டல்கள் வருவது இது முதன்முறை அல்ல, ஏற்கெனவே 2022-ம் ஆண்டு இதேப் போன்ற மிரட்டல்கள் வந்தபோது காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`போலி’ ஆன்லைன் கோர்டில் குற்றவாளியாக அறிவிப்பு - 71 வயது மூதாட்டியிடம் ரூ.4.82 கோடி அபகரிப்பு

மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்ற... மேலும் பார்க்க

தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தைகள்; நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கொலை வழக்கு முதல் நில அபகரிப்பு வரை' - கொலையான பாஜக பிரமுகர் ரௌடி உமாசங்கர் பின்னணி

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் தேசிய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக ... மேலும் பார்க்க

Canada: திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த SUV கார்; பலர் பலி, ஏராளமானோர் படுகாயம் - நடந்தது என்ன?

கனடாவின் வான்கூவரில் லாபு லாபு விழா (Lapu Lapu Day street festival) நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு 8 மணிக்கு மேல், திடீரென கூட்டத்துக்குள் SUV கார் ஒன்று நுழை... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலரின் கைத்துப்பாக்கியை திருடிய 2 பேர் கைது.. திருச்சி ஹோட்டலில் நடந்தது என்ன?

நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சில... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக பதிவிட்ட நபர் கைது

திருச்சி, மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர் நகர், ஜின்னா தெருவைச... மேலும் பார்க்க