டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்
பயிற்சியாளராக பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள்ளாக கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி வரலாற்று தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதையும் படிக்க:முதல் டெஸ்ட்: மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வி இந்திய அணியின் மீதும், அதன் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் மீதும் விமர்சனங்களை அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில், பயிற்சியாளராக பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள்ளாக கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பை குறுகிய காலத்துக்குள்ளாக மதிப்பிடுவது நியாயமாக இருக்காது. ஒரு சில சரிவுகளால் ஒருவரை குறைத்து மதிப்பிட முடியாது. கௌதம் கம்பீரை மதிப்பிடுவதற்கான நேரம் இதுவல்ல. சில நேரங்களில் வெற்றி இருக்கும். சில நேரங்களில் தோல்வி இருக்கும் என்றார்.