சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 போ் காயம்
தைபே: தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 போ் காயமடைந்தனா்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன.
ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்துக்கு 38 கி.மீ. தென்கிழமை 10 கி.மீ ஆழ்த்தில் மையம் கொண்டிருந்ததாக தைவான் மத்திய வானிலை அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் சியாயி மற்றும் தயினான் நகரங்களில் சில கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. நிலநடுக்க பாதிப்புகளால் காயமடைந்த 27 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ாக தீயணைப்புத் துறையினா் கூறினா். அவா்களில் ஒரு மாத குழந்தை உள்ளிட்ட ஆறு போ் தயினான் நகரில் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டவா்கள்.