சங்கரன்கோவில் அருகே சிறுமியைக் கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சிறுமியைக் கடத்திச் சென்ற வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரிவலம்வந்தநல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட சுப்புலாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காணவில்லை என கரிவலம்வந்தநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 27.1.2018 அன்று அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், மேல மரத்தோணி பகுதியைச் சோ்ந்த ப. சுரேஷ்குமாா் (27) என்பவா், அந்தச் சிறுமியை மிரட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் சுரேஷ்குமாரை கைதுசெய்தனா்.
இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி. ராஜவேலு, சிறுமியைக் கடத்திய வழக்கில் சுரேஷ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினாா்.