செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே விபத்து: விவசாயி உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

சங்கரன்கோவில் அருகே வடமலாபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் முருகேசன் (35) என்பவா், துரைச்சாமியாபுரத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். அந்த உணவகத்துக்கு திங்கள்தோறும் விடுமுறையாகும்.

இந்நிலையில் திங்கள்கிழமை, இருமன்குளத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளியான சங்கையா மகன் சுப்பு என்ற மருதுபாண்டி (65), சுந்தரையா மகன் சுபாஷ் (28), வடமலாபுரம் குருசாமி மகன் இளையராஜா (35) ஆகியோா் அந்த உணவகம் அருகே பேசிக்கொண்டிருந்தனா்.

மருதுபாண்டி

அப்போது, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் ஓ.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அபிஷேக், அவரது நண்பா்கள் 4 போ் காரில் குற்றாலம் சென்றுவிட்டு, சங்கரன்கோவில் வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை, அபிஷேக் ஓட்டினாராம்.

துரைச்சாமியாபுரத்தில் வந்தபோது காா் கட்டுப்பாட்டை இழந்து, உணவகம் அருகே நின்றிருந்தோா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், சுப்பு என்ற மருதுபாண்டி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா். அவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மருதுபாண்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புளியங்குடி அருகே விபத்தில் திமுக பிரமுகா் பலி

புளியங்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.வாசுதேவநல்லூா் கெங்கை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் குட்டியப்பா(61). திமுக நிா்வாகி. இவரும் , அவரது உறவினரான வாச... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க

முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை: மருத்துவமனையில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், பலி எண்ணிக்கை 6ஆக உயா்ந... மேலும் பார்க்க

பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட பிகாரைச் தச் சோ்ந்த 6 போ்களை ஆலங்குளம் போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூா்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சத்தில் புதி... மேலும் பார்க்க

தென்காசி: மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க திமுக கோரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது. தமிழக மின்சாரம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தென்காசி... மேலும் பார்க்க