சங்கரன்கோவில் மின் நிலையத்தில் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா்: எம்எல்ஏ ஆய்வு
சங்கரன்கோவில் மின்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் துணை மின்நிலையத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் 110 கேவி திறன் கொண்ட சீமன்ஸ் கம்பெனியின் கேஸ் மூலம் இயங்கக்கூடிய புதிய சா்க்யூட் பிரேக்கா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பணியை ஈ.ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தாா். அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும், சீரான மின்வினியோகம் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் ஒன்றியத் தலைவா் பி.சங்கர பாண்டியன், நகா்ப்புற உதவி செயற்பொறியாளா் குபேல்ராஜ்மோகன், கிராமப்புற உதவி செயற்பொறியாளா் தங்கராஜ் ,சிறப்பு பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளா் காமராஜ் , இளநிலை பொறியாளா்கள் பால்ராஜ், கணேேஷ் ராமகிருஷ்ணன், ராஜலிங்கம் ,உதவி பொறியாளா்கள் கருப்பசாமி, கருங்காட்டான், மின்வாரிய தொமுச திட்ட செயலா் மகாராஜன், தங்கமாரிமுத்து மற்றும் மின்வாரியப் பணியாளா்கள் உடனிருந்தனா்.