செய்திகள் :

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

post image

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.

அரிட்டாபட்டி மக்கள்

அரிட்டாப்பட்டி,  அ.வெள்ள்ளாளப்பட்டியில் ஊர் பிரமுகர்களால் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முதலில் அரிட்டாப்பட்டி மந்தை திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். உள்ளூர் மக்கள் குறைவாகவே கலந்துகொண்டார்கள். அதனால், வெளியூரிலிருந்து மக்களை அழைத்து வந்து முதல்வர் வருகின்ற சாலை வழியில் நிறுத்தியிருந்தனர்.

மாலையில் அரிட்டாபட்டி வந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "திடீரென்று நான் இங்கு வந்ததற்கு காரணம், நேற்று இப்பகுதி மக்கள் வந்து என்னை அழைத்தார்கள். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது, அதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை மக்கள் தந்தார்கள் என தெரியும், அதனை உணர்ந்து உங்களில் ஒருவனாக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில், எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பேசி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது வெற்றி பெற்றுள்ளது, அதிமுக, பாமக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை நிறைவேற்றி கொடுத்தார்கள்.

மக்களால் ஆட்சியில் இருக்கும் நான், முதல்வர் பொறுப்பில் இருக்கும் வரை டங்ஸ்டன் வராது என்றேன், ஒரு வேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றேன், எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என பெரியவர்கள் அழைத்தார்கள். உண்மையில் நன்றி உங்களுக்குத் தான் சொல்ல வேண்டும், நான் பிரித்து பேசவில்லை, வெற்றி நமக்கு கிடைத்துள்ளது, மீண்டும் ஒருமுறை உங்களை சந்திக்க வருவேன்.

அரிட்டாபட்டி

உங்களுடைய அன்பான முகத்தை, எழுச்சியான முகத்தை,சிரித்த முகத்தோடு பார்க்கின்றபோது உங்களோடு நீண்ட நேரம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், மற்றொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப்பிறகு விமானத்தைப் பிடித்து சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. நாளைக்கு வேறொரு மாவட்டத்திற்கு செல்லவேண்டும். அதனால், நீண்ட நேரம் பேசமுடியாது. அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம்.

இன்னும் ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கு ஆதரவு தாருங்கள். எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன்" என்றவர், டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பை கொண்டாடும் வைகயில் அவ்வூரைச் சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு வெற்றி என்று பெயர் சூட்டினார்.

அரிட்டாபட்டி வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்கிற கோரிக்கை மனுவை ஊர் பிரமுகர்கள் தயார் செய்து முதல்வரிடம் கொடுக்க வைத்திருந்த நிலையில், அதை கொடுக்க விடாமல் காவல்துறையினரும், அதிகாரிகளும் தடுத்துவிட்டதாக மக்கள் புகார் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Canada PM: கனடா தேர்தல், டிரம்ப் பாணியில் இந்திய வம்சாவளி வேட்பாளர் பிரசாரம்... கை கொடுக்குமா?

இந்த மாதத் தொடக்கத்தில் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதில் இருந்து, 'அடுத்த கனடா பிரதமர் யார்?' என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்த ரேசிலும் மூன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் ஒ... மேலும் பார்க்க

``103 திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகள்; தார்ப்பாய் மூலம் பாதுகாப்பு'' -அமைச்சர் சக்கரபாணி தகவல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்... மேலும் பார்க்க

Modi -Trump: ``நல்ல நண்பர், நம்பகமான பார்ட்னர்ஷிப்'' -டிரம்புடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி

கடந்த வாரம், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப். இந்த நிகழ்வில் இந்தியா சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சில இந்திய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.'இந்தியா அமெரிக்க பொருள்களி... மேலும் பார்க்க

Doctor Vikatan: புளிப்பு நெல்லிக்காய், துவர்ப்பு நெல்லிக்காய்... இரண்டில் எது பெஸ்ட்?

Doctor Vikatan: புளிப்புச் சுவையுள்ளகுட்டி நெல்லிக்காய், துவர்ப்புச் சுவையுள்ள பெரிய நெல்லிக்காய் என இரண்டு கிடைக்கிறது. இவற்றில் எது அதிக ஆரோக்கியமானது... எதை, எப்படிப் பயன்படுத்தலாம்... ஒருவர் ஒரு ந... மேலும் பார்க்க

``எல்லோருக்கும் விலை உண்டு என்றவருக்கு பதவியா?'' -எல்.முருகன் முன்பு மோதிக் கொண்ட பாஜக நிர்வாகிகள்!

பா.ஜ.க உள்கட்சி தேர்தல்பா.ஜ.க உள்கட்சி தேர்தலில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் பதவிக்கு, தற்போதைய மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒரத்தநாட்டை சேர்ந்த கர்ணன், உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ... மேலும் பார்க்க