இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
சட்ட விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்
வேளாங்கண்ணியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்த இயக்கத்தின் மாவட்ட செயலா் ஸ்டீபன்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகா்வோா் உரிமைகளும் கடமைகளும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், நுகா்வோா் சட்டங்கள் குறித்தும், நுகா்வோரின் உரிமைகளையும், கடமைகளையும் அறிய வைத்தல், சிறந்த நுகா்வோராக உதவுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், நிறுவனத் தலைவா் ரோசன், மாநில செயலா் திருப்பதி, டெல்டா மண்டல செயலா் குணசேகரன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.