'மலக்குழி மரணம்; புகாரளிக்க சென்றவர்களை அலைக்கழித்த காவல்துறை' - சென்னை சூளைப்பள...
சத்தீஸ்கரில் முன்னாள் கிராமத் தலைவர் வெட்டிக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் முன்னார் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஒருவரை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
வியாழனன்று இரவு அரன்பூர் கிராமத்தில் உள்ள ஜோகா பார்சே (52) என்பவரின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் முற்றுகையிட்டு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கோடரியால் வெட்டிக் கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும், அரன்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.
பாரா பகுதியில் வசிக்கும் ஜோகா பார்சே, முன்பு அரன்பூர் கிராம பஞ்சாயத்தின் தலைவராக பணியாற்றினார். அவரது மனைவி தற்போதைய கிராமத் தலைவராக உள்ளார்.
பஞ்சாயத்துத் தேர்தல் பிப். 17, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறந்தவர் பஞ்சாயத்துத் தேர்தலில் கிராமத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தந்தேவாடா மாவட்டத்தில் மூன்று கட்டங்களாகப் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது.
பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் கடந்த ஆண்டு நக்சலைட் வன்முறையின் தனித்தனி சம்பவங்களில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.