செய்திகள் :

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்டுகள், மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (ஜூலை 24) சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த 15 பேரில், ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் (எ) லாலு குஹாராம், ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட அவரது மனைவி காம்லி (எ) மோடி பொடாவி, ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பொஜ்ஜா மத்காம் உள்பட முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், தம்பதியான புத்ராம் மற்றும் காம்லி ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஏராளமான தாக்குதல்கள் நடத்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையடுத்து, சரணடைந்த மாவோயிஸ்டுகள் 15 பேரின் மறுவாழ்வுக்கு அரசுத் திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, பஸ்தார் மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு எதிரான லொன் வர்ராட்டு மற்றும் புனா மார்கெம் எனும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது வரை பஸ்தார் பகுதியில் செயல்பட்டு வந்த 1,020 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க