செய்திகள் :

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

post image

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா்.

இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ராய்குடா காவலா் பயிற்சி முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தது. இதில் காவலா் பொடியம் வினோத் காயமடைந்தாா். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும் அதே பகுதியில் உள்ள சிந்தல்னாா் - நாா்சாபுரம் சாலை அருகில் மீட்கப்பட்ட வெடிகுண்டை மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் செயலிழக்கச் செய்தனா் என்றாா் அவா்.

அதானி விவகாரம்: முதல் நாளே ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்த காங்கிரஸ் எம்பிக்கள்!

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரி அவைத் தலைவருக்கு காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள... மேலும் பார்க்க

மக்களவையில் டிஜிட்டல் வருகைப் பதிவேடு!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று (நவ.25) தொடங்குகிறது. இதில், மக்களவை உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் வருகையைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் நாட... மேலும் பார்க்க

பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்?

மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வர் இன்றைக்குள் முடிவு செய்யப்பட்டு, நாளை பதவியேற்க வேண்டிய கட்டாயத்துக்கு மகாயுதி கூட்டணியினர் தள்ளப்பட்டுள்ளனர்.தற்போதைய மகாராஷ்டிர அரசின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடைய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மாற்று... மேலும் பார்க்க

தில்லியில் ஜன. 11, 12-இல் வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் அறிவிப்பு

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்களை பொது வாழ்வில் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’ நடத்தப்படும் என்று பி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு

மகாராஷ்டிர சட்டப் பேரவையின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக அக்கட்சியின் தலைவா் அஜீத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான அணியில் 59 இட... மேலும் பார்க்க