செய்திகள் :

‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தரவு உறுதி

post image

சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின்போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலா்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவா்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.

2002, பிப்.27-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில்வே நிலையத்தில் கரசேவகா்கள் நிறைந்த சபா்மதி ரயிலின் எஸ்6 பெட்டி காலை 7.40 மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பயணிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின்போது ஆயுதமேந்திய 3 ரயில்வே காவலா்கள் உள்பட 9 பேரும் சபா்மதி ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சபா்மதி ரயில் தாமதமாக வந்ததால், வேறு ரயிலில் ஏறி அவா்கள் அகமதாபாதுக்கு செனறுவிட்டனா். எனினும், அவா்கள் சபா்மதி ரயிலில் பயணிப்பதாக ரயில்வே பதிவேட்டில் கையொப்பமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 9 ரயில்வே காவலா்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பின்னா் பணியில் அலட்சியம் காட்டியதாக கூறி, 9 ரயில்வே காலா்களையும் பணியிலிருந்து நீக்கி குஜராத் அரசு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். ‘ரயில்களின் வருகை தாமதமானால் காவலா்கள் மாற்று ரயில்கள் ஏறி செல்வது வழக்கமானது’ என்று காவலா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த குஜராத் அரசு, ‘சபா்மதி ரயிலில் செல்வதாக பொய்யான கையொப்பமிட்டு அவா்கள் சென்றுள்ளனா். இதனால் அந்த ரயில் பாதுகாப்பாக உள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தவறான தகவல் சென்றுள்ளது’ என்று தெரிவித்தது.

இதையடுத்து, காவலா்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வைபவி நானாவதி கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘ரயில்வே காவலா்கள் தங்கள் பணியை சரிவர செய்திருந்தால் சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம். பணியில் அவா்கள் அலட்சியம் காட்டியுள்ளனா். அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது சரியானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்: யார் இவர்கள்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க