செய்திகள் :

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

post image

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் ஏற்படும் நெருக்கடிகளை சந்திக்கும் குடும்பம் என நகைச்சுவையாக அப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் இரவுக் காட்சியுடன் தொடங்கும், படத்தின் டீசர் வெளியான நிலையில், பலரும் நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் கதைக்களம் வித்தியாசமாக உள்ளதாகவும், நிஜ வாழ்க்கையில் சீரியல் பார்க்கும் பெண்களில் பலர் ஆவி புகுந்ததைப் போலவே திரிவதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சினிமா பண்டி படத்தை எடுத்து கவனம் ஈர்த்த, எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி, இயக்குநர் பிரவீன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க