மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் காவேரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஹிந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.