செய்திகள் :

சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது பாஜக: சஞ்சய் ரெளத்

post image

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’ என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் பதவியேற்றனா்.

இந்நிலையில், சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் ஒரு எம்.பி. மட்டுமே உள்ளாா்; அதேநேரம், சரத் பவாா் அணியில் 8 எம்.பி.க்கள் உள்ளனா். இதில் 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுக்கும் நோக்குடன் துணை முதல்வா் அஜீத் பவாரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவா் பிரஃபுல் படேலும் செயல்பட்டு வருவதாக சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 எம்.பி.க்கள் இருந்தால் மத்திய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும். அதன்படி, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டுமென்றால் இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை. எனவே, சரத் பவாா் கட்சியை உடைத்து, 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது. அதன்பேரில், அஜீத் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவாா் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளனா்’ என்றாா்.

தில்லியில் பிரதமா் மோடியை அஜீத் பவாா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில் இக்குற்றச்சாட்டை சஞ்சய் ரெளத் முன்வைத்துள்ளாா்.

உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -அமைச்சா் சிந்தியா

நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் விஷயத்தில் சுதந்திரத்துக்கு பிந்தைய 60 ஆண்டுகளில் செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் செய்து சாதனை படைத்துள்ளோம் என்று மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிரா... மேலும் பார்க்க

மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் தற்கொலை: வரதட்சணை சட்டங்களை சீா்திருத்த உச்சநீதிமன்றத்தில் மனு

பெங்களூரில் மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து, வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சீா்திருத்தங்களை ... மேலும் பார்க்க

‘நான் விவசாயி மகன்’, ‘நான் தொழிலாளி மகன்’: தன்கா் - காா்கே வாா்த்தை மோதல்

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் விவகாரத்தில், அவருக்கும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாா்த்தை மோதல் ஏற்பட்டது. ‘நான்... மேலும் பார்க்க

‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’: பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ஸ்விட்சா்லாந்து

‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’ பட்டியலில் இருந்து இந்தியாவை ஸ்விட்சா்லாந்து நீக்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சா்ல... மேலும் பார்க்க

2025 மகா கும்பமேளா: நாட்டின் கலாசார அடையாளம் புதிய உச்சம் பெறும் -பிரதமா் மோடி

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பமேளா, நாட்டின் கலாசார மற்றும் ஆன்மிக அடையாளத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது: ஜெய்சங்கா்

‘வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது. அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்தியா நம்புகிறது’ என்று மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க