செய்திகள் :

`சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால்..'- ஆளுநர் ரவி பேச்சு; அரசியலமைப்பை சுட்டிக்காட்டிய அன்பில் மகேஸ்!

post image

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சையானது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றியதும் பேசு பொருளாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

ஆளுநர் ரவி

அப்போது, ``இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. பலரும் ஆளுநருக்கு கண்டனங்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தன் எக்ஸ் பக்கத்தில், ``அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform" என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Vijay: தவெக மாநாடு; ``உங்களுக்காக எங்களிடமிருந்து..." - வாழ்த்தும் இயக்குநர் வெங்கட் பிரபு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான பண... மேலும் பார்க்க

வடலூர்: அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்ட... மேலும் பார்க்க

`எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக கூறுங்கள்.. விஷத்தை ஏற்றாதீர்கள்' - திருமாவளவனுக்கு அதியமான் மெசேஜ்

ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்ப... மேலும் பார்க்க