செய்திகள் :

`சரியான முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?' - நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் வகுப்பு

post image

நாம் முதலீடு செய்யும் போது, நம் நிதி இலக்குகளை (Financial Gols) நிர்ணயம் செய்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும், அப்போது அதற்காக முதலீட்டுத் திட்டங்களை (Investment Products) தேர்வு செய்வோம். ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் சாதக பாதகங்களை கொண்டிருக்கும். அவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் நாம் அதிக பலன்களை பெற முடியும்.

முதலீடு
முதலீடு

நாணயம் விகடன், முதலீட்டுத் திட்டங்களை  சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி? என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 19, சனிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ. 300 மட்டுமே. Winworthwealth.com நிறுவனர் எஸ்.கார்த்திகேயன் பயிற்சி அளிக்கிறார்.

பயிற்சியாளர் பற்றி..

எஸ். கார்த்திகேயன் சுமார் 35 வருடங்களாக நிதி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். காப்பீடு தொடங்கி காமாடிட்டி வரை பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்.

எஸ்.கார்த்திகேயன், நிறுவனர், Winworthwealth.com

தனிநபர் நிதி மேலாண்மை என்கிற ‘பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட்’ கற்றுத் தருவதற்காக, எஸ். கார்த்திகேயன் மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஸ்வப்னா பாபு ஆகியோர் இணைந்து வீல் அகாடமி (weal academy) நடத்தி வருகிறார்கள். இதில் 7 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் கற்றுத் தரப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் கற்று தரப்படுவை:

முக்கிய முதலீட்டுத் திட்டங்கள், எந்த நிதித் தேவைக்கு எந்த முதலீடு, குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்துக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கி சொல்லப்படுகிறது.

பயிற்சியில் கற்று தரப்படுவை

இவை தவிர ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடுகள், வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளின் சாதக பாதகங்கள் விளக்கி சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இந்த நிகழ்ச்சியில் நிவர்த்தி செய்ய முடியும். முன்பதிவு செய்ய https://bit.ly/4ikMZNn

நீங்க பணக்காரர் ஆகணுமா? இந்த நம்பர் 1 தவறை செய்யாதீங்க!

நல்லா உழைக்கிறீங்க, டீசண்டான சம்பளமும்வாங்குறீங்க, வாழ்க்கைல நல்லநிலைமைக்கு முன்னேறணும்னுகனவும் இருக்கு... ஆனா, நீங்க எவ்வளவு மெனெக்கெட்டாலும், உங்களோடசேமிப்பு வேகமா வளர மாட்டேங்குதா? வருங்காலத்துக்கா... மேலும் பார்க்க

சென்னை: ஏலச்சீட்டு நடத்தி 20 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி... தலைமறைவான ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி?

சென்னை தி.நகர், ஆர்.கே.புரம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தி.நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரும் தி.நகர் ராஜபிள்ளைதோட்டம் பகுதியைச் சேர்ந்த அட்டோ டிரைவர் குமாரும் நண்பர்கள்... மேலும் பார்க்க

சென்னை மக்களே உஷார்! - டிஜிட்டல் அரெஸ்ட்டில் ரூ.4.67 கோடி இழந்த மூதாட்டி - என்ன நடந்தது?

சென்னை, அபிராமபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயரான மூதாட்டி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை தொலை தொடர்பு அமைப்பான டிராய் அதிகாரி என அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் மூதாட்டியிடம், ``உங்க... மேலும் பார்க்க

Cyber Crime: ஓய்வு பெற்ற IFS அதிகாரியிடம் ரூ.6.80 கோடியை ஏமாற்றிய மோசடி கும்பல்... என்ன நடந்தது?

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. சமீபகாலமாக உங்கள் பெயருக்கு வந்திருக்கும் பார்சலில் போதை பொருள்கள் இருப்பதாகக் கூறி சைபர் க்ரைம் கும்... மேலும் பார்க்க

லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல்; நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்!

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலை துறை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்க... மேலும் பார்க்க