செய்திகள் :

சர்வதேச விருதுபெற்ற பேட் கேர்ள்!

post image

பேட் கேர்ள் திரைப்படம் ரோட்டர்டம் திரைவிழாவில் விருது வென்றுள்ளது.

இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியிடப்பட்டது.

முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: கார்த்தி 29 படத்தில் வடிவேலு? ரசிகர்கள் மகிழ்ச்சி!

டீசரில் பேசப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பிராமணர்களை மோசமாக சித்திரிப்பதாகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக், இயக்குநர் மோகன் ஜி தொடர்ந்து தன் அதிருபதியை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

பேட் கேர்ள் படக்குழுவினர்.

இந்த நிலையில், ரோட்டர்டம்மில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பேட் கேர்ள் திரைப்படத்துக்கு அறிமுக இயக்குநர்களை கௌரவிக்கும் நெட்வொர்க் ஃபார் தி புரமோஷன் ஆஃப் ஆசியன் சினிமா (NETPAC - Network for the promotion of asian cinema) விருது வழங்கப்பட்டுள்ளது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.இப்படத்தில... மேலும் பார்க்க

ராமம் ராகவம் புதிய வெளியீட்டுத் தேதி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் எப்போது?

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத... மேலும் பார்க்க

‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!

காதல் என்பது பொதுவுடமை படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் ச... மேலும் பார்க்க

கார்த்தி 29 படத்தில் வடிவேலு? ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் கார்த்தியில் 29ஆவது படத்தில் பிரபல நடிகர் வடிவேலு இணைந்துள்ளதாக இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது. நகைச்சுவை கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமான வடிவேலு தற்போது நாயகனாகவும் சிறப்புத் தோற்றங்களில... மேலும் பார்க்க