செய்திகள் :

சவுதி அரேபியா சென்றார் பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

post image

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்குச் சென்றுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தில், இளவரசர் முஹம்மதுடன் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப், தகவல் அமைச்சர் அட்டாடுல்லா தரார், சுற்றுச்சூழல் அமைச்சர் முஸாதிக் மாலிக் மற்றும் சிறப்பு உதவியாளர் தாரிக் ஃபதேமி ஆகியோர் சவுதி அரேபியா சென்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்குள், 3 வது முறையாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேலினால் தாக்கப்பட்ட கத்தாருக்கு ஆதரவாக கடந்த செப்.11 மற்றும் செப்.15 ஆகிய இருநாள்களும், தலைநகர் தோஹாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

Pakistani Prime Minister Shahbaz Sharif is on an official visit to Saudi Arabia.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள டிரம்ப், நாளை (செப். 18) ... மேலும் பார்க்க

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் ஏரியில், 140 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி மாயமான பேய்க் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், கடந்த 1867 ஆம் ஆண்டு 3 அடுக்குகளைக் கொண்ட, எஃப்.ஜ... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலானியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனி... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 5,000 கிலோ எடை கொண்ட சரக்குடன் என்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.மேலும், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் ப... மேலும் பார்க்க

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டி... மேலும் பார்க்க

காஷ் படேலிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

அமெரிக்காவில் வலதுசாரி ஆா்வலா் சாா்லி கிா்க்கின் படுகொலை தொடா்பான விசாரணையில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இய... மேலும் பார்க்க