செய்திகள் :

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

post image

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 5,000 கிலோ எடை கொண்ட சரக்குடன் என்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.

மேலும், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், அவர்களின் ஆராய்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப பொருள்கள் உள்ளிட்டவை சரக்கு விண்கலன் மூலம் அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.11 மணிக்கு (அமெரிக்க நேரம்) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், ஆளில்லா ’சிக்னஸ் எக்ஸ்எல்’ என்ற சரக்கு விண்கலன் மூலம் 5,000 கிலோ எடை கொண்ட பொருள்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு நாசா அனுப்பியது.

இந்த விண்கலன், சர்வதேச விண்வெளி மையத்தை புதன்கிழமை சென்றுசேர வேண்டிய நிலையில், பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இந்த விண்கலன் சிக்கியுள்ளது.

அடுத்து என்ன?

இதுதொடர்பாக நாசா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”சிக்னஸ் எக்ஸ்எல்’ விண்கலனின் பிரதான என்ஜின் திட்டமிட்டதைவிட முன்னதாகவே இன்று அதிகாலை செயல்பாட்டை நிறுத்திவிட்டது.

ஐஎஸ்எஸ் -க்கு அருகில் சென்று சுற்றுப்பாதையை அடைவதற்காக இரண்டு உந்து என்ஜின்களை செயல்படுத்திக் கொண்டிருந்தபோது நின்றுவிட்டது.

விண்கலத்தில் உள்ள மற்ற அனைத்து அமைப்புகளும் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

இதையடுத்து சர்வதேச விண்வெளி மையத்தை திட்டமிட்டபடி புதன்கிழமை விண்கலன் அடையாது, மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருவதால், விண்கலன் சென்றடையும் மாற்று தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NASA has announced that a spacecraft carrying a 5,000-kilogram cargo to the International Space Station has experienced a failure in its main engine.

இதையும் படிக்க : தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டி... மேலும் பார்க்க

காஷ் படேலிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

அமெரிக்காவில் வலதுசாரி ஆா்வலா் சாா்லி கிா்க்கின் படுகொலை தொடா்பான விசாரணையில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இய... மேலும் பார்க்க

ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்

ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்... மேலும் பார்க்க

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சீனாவின் டிக் - டாக் உடன் அமெரிக்காவுக்கு ஒர... மேலும் பார்க்க

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.ஜெனீவாவில் செய்தியாளர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்க... மேலும் பார்க்க