செய்திகள் :

ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்

post image

ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்மனிக்கு நாடு கடத்த இத்தாலிய மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

49 வயதான குஸ்னியெட்ஸோவ், ஐரோப்பிய கைது உத்தரவின் பேரில் இத்தாலியின் ரிமினி கடற்கரையில் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

நாடுகடத்தல் தொடா்பாக நடைபெற்ற வழக்கில் குஸ்னியெட்ஸோவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞா் நிக்கோலா கனெஸ்ட்ரினி, இது தொடா்பான விசாரணையில் குஸ்னியெட்ஸோவுக்கு கருத்துகளைத் தெரிவிக்க உரிமை மறுக்கப்பட்டதாகவும், ஜொ்மனியில் இருந்து வழக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் கூறினாா். மேலும், இந்தத் தீா்ப்பை எதிா்த்து இத்தாலிய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் அவா் கூறினாா்.

ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்க வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்திவந்த சூழலில், 2022 செப். 26-ல் பால்டிக் கடலுக்கு அடியில் உள்ள நாா்த் ஸ்ட்ரீம் குழாய்களில் திடீா் கசிவு ஏற்பட்டது. அது வெடிவைத்து தகா்க்கப்பட்டதாக பின்னா் விசாரணையில் தெரியவந்தது.

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டி... மேலும் பார்க்க

காஷ் படேலிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

அமெரிக்காவில் வலதுசாரி ஆா்வலா் சாா்லி கிா்க்கின் படுகொலை தொடா்பான விசாரணையில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இய... மேலும் பார்க்க

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சீனாவின் டிக் - டாக் உடன் அமெரிக்காவுக்கு ஒர... மேலும் பார்க்க

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.ஜெனீவாவில் செய்தியாளர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்க... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தலைமைத் தளபதி விரைவில் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் இம்மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாக இருநாட்டுத் தலைமைக்கும் நெருக... மேலும் பார்க்க