செய்திகள் :

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி

post image

மத்திய அரசின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருது சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award). பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படும். நாட்டில் உள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 1908-ம் ஆண்டு மார்ச் 13-ம் அன்று வ.உ.சி. கைது செய்யப்பட்டார்.

ஆ.இரா.வேங்கடாசலபதி

அதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக, மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் விரிவாக ஆராயும் வகையில் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய `திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' என்ற புத்தகத்துக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை எம்.பி சு. வெங்கடேசன், ``சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908-ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908'" எனப் பாராட்டியிருக்கிறார். பலத்துறையின் அறிஞர்களும் சாகித்ய அகாதமி விருது பெறும் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

`நான் வேற மாதிரி கறுப்பன்' - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 7

‘சூதாட்டத் தொழில் ஈடுபட்டு மனம்திருந்தி திரும்பினாலும், அந்தப் பாவக் கறை எப்போதும் அழியாது’ என்ற குற்றப் பார்வை லூயிஸ் மிஷாவ் மீது படிந்திருந்தது.தேவாலயப் பணிகளில் இருந்து விலக இது காரணமாக இருக்கலாம் ... மேலும் பார்க்க

மதன் எழுதிய Blockbuster தொடர் 'வந்தார்கள் வென்றார்கள்'.. இப்போது Audio வடிவில் | Vikatan Play

ஆண்டியாக இருந்தாலும் சரி, அலெக்ஸாந்தராக இருந்தாலும் சரி, வடக்கிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் - விண்ணை முட்டும் இமயமலைத் தொடரைத் தாண்டியாக வேண்டும். அல்லது வெள்ளம் பெருக்... மேலும் பார்க்க

சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

ஒரு கண் பார்வை இழந்த, அந்த கசப்பான தருணங்களை விவரித்த புரஃபஸர் மிஷாவ், தன்னோட அண்ணன் தனக்கு உதவி செய்ததாகச் சொல்லியதை, எப்படி உதவினார் என விரிவாக கூற மறந்து விட்டு, அடுத்த கேள்வியை என்னிடமிருந்து எதிர... மேலும் பார்க்க

`மகாகவியென்றாலே பேராற்றல், பேரதிசயம்...' - வியக்கும் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி!

மகாகவி என போற்றப்படும் பாரதியாரின் 143 பிறந்தநாளான நேற்று தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பாரதியின் முழு படைப்பு தொகுப்புகளை பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

Book Review: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகம் குறித்த விசிக எம்.பி ரவிக்குமாரின் விமர்சனம்

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் குறித்து எழுத்தாளரும், விசிக-வின் பொதுச்செயலாளருமான எம்.பி ரவிக்குமார் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், " விகடன் பிரசுரமும்... மேலும் பார்க்க

`எனக்கு இன்னொரு பேர் இருக்கு!'; மிஷாவ்வின் சூதாட்ட சாம்ராஜ்யம் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 5

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கறுப்பர்களிடையே மார்கஸ் கார்வேயின் இயக்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.மறுபுறம் கறுப்பர்களுக்கு எதிரான வன்மமும் வெள்ளையர்களின் மத்தியில் அதிகரித்திருந்... மேலும் பார்க்க