'அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, நலத்திட்ட வழங்குதல்' - ஸ்டாலினின் ஈரோடு விச...
சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ. 1.43 கோடியில் திட்டப் பணிகள் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ. 1 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.
செட்டிகுளம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் கட்டப்படவுள்ள பேருந்து நிழற்குடைக் கட்டட அடிக்கல் நாட்டுதல், அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு, சுப்பராயபுரம் ஊராட்சியில் ரூ. 75.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு, அமுதுண்ணாகுடியில் ரூ. 9.77 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு, எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ. 18 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு, சாத்தான்குளம் யூனியன் அலுவலகம் முன் ரூ. 8 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடைக்கு அடிக்கல், புதுக்குளம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் செட்டிகுளம் சிவகாமிசுந்தரி கணேசன், சுப்பராயபுரம் சுயம்புதுரை, அமுதுண்ணாகுடி முருகன், புதுக்குளம் பாலமேனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பணிகளைத் திறந்துவைத்துடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இதில், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஜோசப், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், நகர காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால், பேரூராட்சி உறுப்பினா் லிங்கபாண்டி, தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜான்ராஜா, மாவட்டப் பொருளாளா் காங்கிரஸ் எடிசன், ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா் கோதண்டராமன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை நன்றி கூறினாா்.