சாம்பியன்ஸ் கோப்பை- இந்தியா பந்துவீச்சு
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசுகிறது.
துபை மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்ங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.
அதேநேரத்தில், தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு துவண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி ஆட உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி இன்று களம் கண்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.