RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல்: ஆப்கன் வீரர் கஸன்ஃபர் விலகல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கன் பந்து வீச்சாளர் அல்லா கஸன்ஃபர் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகளின் இறுதி விவரத்தை அந்ததந்த அணிகள் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஏற்கெனவே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் கடந்த வாரம் அறிவித்தார். இன்று காலை மிட்செல் ஸ்டார்க்கும் திடீரென விலகுவதாக அறித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி: ஸ்டார்க் விலகல்! 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஆஸி.!
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸன்ஃபர் கீழ் முதுகு எலும்பு முறிவு காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக 20 வயதான நங்கேயாலியா கரோட் மாற்று வீரராக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நங்கேயாலியா கரோட் ஆப்கானிஸ்தான் அணிக்காக 7 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கஸன்ஃபருக்கு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது காயம் ஏற்பட்டது. ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கான முதல் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 21 ஆம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்
ஹஸ்மத்துல்லா ஷாகிடி(கேப்டன்), இப்ராகிம் ஜத்ரன்,ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹமத் ஷா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், குல்படின் நைப், மொகமது நபி, ரஷீத் கான், ஃபரீ அகமது, ஃபரூக்கி, நங்கேயாலியா கரோட், நவீத் ஜத்ரன், நூர் அகமது.