செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

இதையும் படிக்க: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

இந்தப் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பென் டக்கெட் படைத்தார். இன்றையப் போட்டியில் அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்பாக, நியூசிலாந்து வீரர் நாதன் ஆஷ்டிலே அமெரிக்காவுக்கு எதிராக 145* ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை பென் டக்கெட் இன்று முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்தவர்களில் டாப் 5 இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 141* ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் சௌரவ் கங்குலியும், 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 141 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க: துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்

பென் டக்கெட் - 165 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2025

நாதன் ஆஸ்டிலே - 145* ரன்கள் - அமெரிக்காவுக்கு எதிராக, 2004

ஆண்டி ஃபிளவர் - 145 ரன்கள் - இந்தியாவுக்கு எதிராக, 2002

சௌரவ் கங்குலி - 141* ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2000

சச்சின் டெண்டுல்கர் - 141 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1998

பாகிஸ்தானை பழிதீா்க்கும் முனைப்பில் இந்தியா இன்று மோதல்

துபை : கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக... மேலும் பார்க்க

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க