உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
சாம்பியன்ஸ் லீக்கில் சாதனை படைத்த எர்லிங் ஹாலண்ட்..!
மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் பிளே -ஆஃப் லெக் 1 போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
முதல் பாதியில் அசத்திய மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாம் பாதியில் சொதப்பியது. குறிப்பாக கோல் கீப்பர் செய்த சிறிய சிறிய தவறுகளால் அந்த அணி 2-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர் எர்லீங் ஹாலண்ட் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
விரைவாக அதிக கோல்கள்
இதன் மூலம் 49 போட்டிகளில் 49 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக்கில் அதிகபட்சமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 140 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், விரைவாக ஒரு போட்டியில் ஒரு கோல் என்ற விகிதத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
கிளியன் எம்பாப்வே 82 போட்டிகளில் 52 கோல்கள் அடித்துள்ளார். டாப் 10 வரிசைக்குள் எர்லிங் ஹாலண்ட் குறைந்த போட்டிகளில் இந்த வரிசைக்குள் நுழைந்துள்ளார்.
சமீபத்தில் எர்லிங் ஹாலண்டுக்கு மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 2034 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள்
1. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 140
2. லயோனல் மெஸ்ஸி- 129
3. ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி - 103
4. கரீம் பென்சமா - 90
5. ரௌல் - 71