சாயா்புரம் அருகே மளிகைக் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து
ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த சாயா்புரம் அருகே செவ்வாய்க்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்தது.
பெருங்குளத்திலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்தனா்.
சோ்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள்புரம் பகுதியில் இப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்தது. இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயமேற்படவில்லை. சாயா்புரம் காவல் உதவி ஆய்வாளா் சூசை அந்தோணி வந்து விசாரணை மேற்கொண்டாா்.