செய்திகள் :

சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் பகிர்ந்த பா. இரஞ்சித்!

post image

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தினைப் பற்றி விழா ஒன்றில் பேசியுள்ளார்.

ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பா. இரஞ்சித் இயக்கிய படங்களிலேயே மிகவும் வரவேற்பைப் பெற்ற படமாக சார்பட்டா பரம்பரை படமே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கியது.

நடிகர் ஆர்யா மீண்டும் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க உடலை தயார் படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது துணை இயக்குநர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:

இப்போதுதான் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்தேன். ஒரு படத்தினை எழுதி முடிப்பதுபோல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை.

ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ்ப் பிரபா இதன் திரைக்கதையை ஒரு முறை எழுதிவிட்டார். நான் எனது பாணியில் ஒருமுறை மீண்டும் இதனை எழுதிப் பார்த்தேன். ஒரு இடத்தில் வந்து நின்றுள்ளது.

எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குநர் அவருடைய புத்தகத்தை முடித்ததும் அவர் முகத்திலும் இருந்தது என்றார்.

சார்பட்டா பரம்பரை 2 திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்குமென குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் எதுவும் தகவல் அளிக்கவில்லை.

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.10.01.2025மேஷம்:இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை ந... மேலும் பார்க்க

ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வியாழக்கிழமை தோற்றது. இதையடுத்து, காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வ... மேலும் பார்க்க

பெகுலா - புடின்சேவா அரையிறுதியில் மோதல்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா - கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா மோதுகின்றனா். முன்னதாக... மேலும் பார்க்க

சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த சென்னை அண... மேலும் பார்க்க

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார். அவருக்கு வயது 80.கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் பார்க்க