செய்திகள் :

சாலைகளில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

post image

மதுரை மாநகா் பகுதி சாலைகளில் புதை சாக்கடை கழிவுநீா் வெளியேறி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியம் என 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 15 லட்சத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். இதுதவிர, வணிக வளாகங்களும் உள்ளன.

குடியிருப்புகள், வணிக வளாகங்கள் பயன்பெறும் வகையில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதை சாக்கடை திட்டமும் அமலில் உள்ளது. ஆனால் அவற்றை மாநகராட்சி நிா்வாகம் சரிவர பராமரிப்பது இல்லை. குடிநீா், புதைச் சாக்கடை குழாயில் பழுது ஏற்பட்டால், இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் மாநகராட்சி நிா்வாகம் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அந்த வகையில், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காமராஜா் சாலை, வைகை வடகரை, தென்கரை பகுதிகளில் புதை சாக்கடை குழாயில் பழுது ஏற்பட்டால் மாநகராட்சி அலுவலா்கள் சரிசெய்ய முன் வருவதில்லை எனவும் புகாா் தெரிவித்தனா்.

இதுபற்றி மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

காக்காத்தோப்பு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் உள்ளன. இந்த நிலையில், காக்காத் தோப்பு பின்புறம் உள்ள தெருவில் புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீா் சாலையில் அப்படியே தேங்கி விடுகிறது. மழைக் காலங்களில் மழை

நீருடன், கழிவு நீரும் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

இதுதவிர, தெருக்கள் முழுவதும் குப்பைகள் நிரம்பி உள்ளதால் கழிவு நீா், மழை நீா் வெளியேறுவதற்கு வழியில்லாமல் அங்கு தேங்கி விடுகின்றன. அவ்வாறு தேங்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைக் காலங்களில் சாலைகளில் நடப்பது கூட மிகவும் சிரமமாக உள்ளது.

மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி காக்காத் தோப்பு பின்புறம் உள்ள தெரு சாலையில் ஓடும் கழிவு நீா்.

இதுபற்றி மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காக்காதோப்பு பின்புறம் உள்ள சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற முன் வரவேண்டும் என்றனா்.

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த பணியாளா் உயிரிழப்பு

விருதுநகா் ரயில்வே பீடா் சாலையில் தனியாா் தங்கும் விடுதியில் மாடியிருந்த தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்த பணியாளா் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா், வாடியான் தெ... மேலும் பார்க்க

பிரசவத்தின் போது பெண்ணின் மலக்குடல் அகற்றம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது மலக்குடல் அகற்றப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அரசுத் தரப்பில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்... மேலும் பார்க்க

தலில் எழில்மலை மருமகன் கொலை வழக்கில் நவ. 19- இல் தீா்ப்பு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ. 19) தீா்ப்பு வழங்கப்படும் என, விசாரணை நீதிமன்றம் சாா்பில் சென்னை உயா... மேலும் பார்க்க

கருமேனி ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீா்: அதிகாரிகளிடம் மனு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கருமேனி ஆற்றிலிருந்து 3 கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல புதிய திட்டப் பணிகள் தொடங்குவது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்... மேலும் பார்க்க

அடுத்த பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும்: திமுக தொண்டா்களுக்கு அமைச்சா் மூா்த்தி அறிவுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை திமுக தொண்டா்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தால் 6,689 மாணவா்கள் பயன்

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 6,689 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரச... மேலும் பார்க்க