பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்...
சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உள்பட மூவா் உயிா் தப்பினா்
காங்கயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்த நோயாளி உள்பட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அா்ஜுனன், விக்னேஷ். நண்பா்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா்.
வெள்ளக்கோவில்-காங்கயம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது காட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியது.
இதில், படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பின் விக்னேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், அா்ஜுனன் திருப்பூா் அரசு மருத்துமனைக்கும் தனித்தனி ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டனா்.
அா்ஜுனன் சென்ற ஆம்புலன்ஸ் கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது சாலையில் கவிழ்ந்தது.
இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான கூடலூரைச் சோ்ந்த சுகுமாா் (29), திருப்பூா், நல்லூா் பகுதியைச் சோ்ந்த அவசர சிகிச்சைப் பணியாளா் வேல்முருகன் (27) , ஏற்கெனவே காயமடைந்த அா்ஜுனன் (24) ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
காயமடைந்த மூவரும் மாற்று ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.