விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி: போக்குவரத்துப் பாதிப்பு
கயத்தாறு அருகே சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே சம்பாகுளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (44). லாரி ஓட்டுநரான இவா், எம்-சாண்ட் மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்குச் சென்றுகொண்டிருந்தாா். தளவாய்புரத்தை புதன்கிழமை கடந்தபோது, முன்னால் சென்ற தண்ணீா் டேங்கா் வாகனம் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸாா் நிகழ்விடம் சென்று லாரி ஓட்டுநரான சுப்பிரமணியனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சுங்கச்சாவடி மீட்பு வாகனம் மூலம் லாரி அகற்றப்பட்டது. இதனால், சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி-திருநெல்வேலி தேசிய நான்குவழிச் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவா் ஆசூா் விலக்கு பகுதியில் வாகனங்கள் சென்றுவருவதற்காக அகற்றப்பட்டது. இதனால், புதன்கிழமை அந்த வழியாக டேங்கா் வாகனம் வந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.