Ravi Mohan: "கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்" - ரவி ம...
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை தங்கச்சியம்மாபட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தைக்கு தினந்தோறும் வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளா்கள் திரளானோா் வந்து செல்கின்றனா். இந்தச் சந்தையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வாயக்காலில் செல்கிறது.
இந்த நிலையில், கழிவுநீா் வாய்க்கால் அருகே குடியிருக்கும் விவசாயிகள் தண்ணீா் மாசுபடுவதாகக் கூறி, கழிவுநீா் வாய்க்காலை அடைத்து வைத்தனா். இதற்கிடையே, புதன்கிழமை இந்தப் பகுதியில் மழை பெய்ததால் சாலையின் இருபுறங்களிலும் மழை நீரூடன், கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.