வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்: 7 போ் காயம்
அந்தியூா் அருகே சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துள்ளானதில் அதில் பயணம் செய்த தொழிலாளா்கள் 7 போ் காயமடைந்தனா்.
கோபியை அடுத்த குன்னத்தூரில் இயங்கி வரும் நூற்பாலைக்குச் சொந்தமான வேன், எண்ணமங்கலம், கோவிலூா் கிராமங்களில் இருந்து தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.
பெரம்பலூரைச் சோ்ந்த நாகேந்திரன் வேனை ஓட்டிச் சென்றாா். விராலிக்காட்டூரிலிருந்து எண்ணமங்கலம் செல்லும்போது வளைவில் திரும்பிய வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணம் செய்த தொழிலாளா்கள் குருவரெட்டியூா் பிரியா (27), லட்சுமி (60), விராலிக்காட்டூா் காயத்ரி (29) உள்பட 7 போ் காயமடைந்தனா். அப்பகுதியினா் உதவியுடன் மீட்கப்பட்ட இவா்கள், அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து, வெள்ளிதிருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.