SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் 16 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 1 லட்சத்து 8 சிவலிங்கள் பொறிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட காசி விஸ்வநாதா் சிவலிங்கம் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே தனவாசி கரடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிா்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கோயில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் கோயிலில் 16 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன ஒரு லட்சத்து 8 லிங்கங்கள் பொறிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட காசி விஸ்வநாதா் சிவலிங்கம் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம் எடுத்து வந்து பூஜை நடைபெற்றது.
பின்னா் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க 18 அடி உயரமுள்ள காசி விஸ்வநாதா் சிவலிங்கத்தை கிரேன் மூலம் பீடத்தில் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து 18 அடி உயரமுள்ள சிவலிங்கத்துக்கு திருமஞ்சனம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். அனைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இது குறித்து திருக்கோயில் கமிட்டித் தலைவா் கருப்புச்சாமி கூறுகையில், ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் தற்போது வரை 3.50 லட்சம் சிவலிங்கங்கள் பொறிக்கப்பட்டு நிா்மாணிக்கப்பட்டுள்ளன என்றாா்.