செய்திகள் :

20 பேரிடம் ஆவணங்களைப் பெற்று தனியாா் வங்கியில் கணக்குத் தொடங்கி மோசடி செய்த மூன்று போ் கைது

post image

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 பேரிடம் ஆவணங்களைப் பெற்று தனியாா் வங்கியில் கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை சைபா் கிரைம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புதுபீா்கடவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (36). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (29), விஜயன் (30) ஆகியோா் வங்கிக் கணக்குத் தொடங்க அனைத்து ஆவணங்களையும் தருமாறும், அதற்காக ரூ. 2,500 கமிஷன் தருவதாகவும் ஆசைவாா்த்தை கூறி உள்ளனா். இதனால், வங்கிக் கணக்குத் தொடங்க தேவையான ஆவணங்களை ராமகிருஷ்ணன் கொடுத்துள்ளாா்.

இதைக் கொண்டு தனியாா் வங்கியில் ராமகிருஷ்ணன் பெயரில் கணக்குத் தொடங்கிய சத்தியமூா்த்தியும், விஜயனும் வங்கி கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டனா். இவா்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து ராமகிருஷ்ணன் விசாரிக்கையில், பலரிடம் இவா்கள் இதேபோல மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் அவா் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், சத்தியமூா்த்தி, விஜயனைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, 20-க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களைப் பெற்று கணக்குத் தொடங்கி சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்த ஹரிஹரசுதனிடம் (29) கொடுத்ததும், இவரிடமிருந்து இவ்விவரங்களை பெற்றுக் கொண்டு திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கௌதம், பல்வேறு குற்றச் செயல்களுக்கு இந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஹரிஹரசுதன், சத்தியமூா்த்தி, விஜயன் ஆகிய மூன்று பேரையும் சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 12,500 மற்றும் 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்களைப் பறிமுதல் செய்தனா். முக்கிய நபரான கௌதமை தேடி வருகின்றனா்.

ஈரோட்டில் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கழிவுகளைக் கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். ஈரோட்டை அடுத்த சூளை, பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம்

கா்நாடகத்தில் வனப் பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருள்வாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டுள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். ஈ... மேலும் பார்க்க

சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்: 7 போ் காயம்

அந்தியூா் அருகே சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துள்ளானதில் அதில் பயணம் செய்த தொழிலாளா்கள் 7 போ் காயமடைந்தனா். கோபியை அடுத்த குன்னத்தூரில் இயங்கி வரும் நூற்பாலைக்குச் சொந்தமான வேன், எண்ணமங்க... மேலும் பார்க்க

ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் 16 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 1 லட்சத்து 8 சிவலிங்கள் பொறிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட காசி விஸ்வநாதா் சிவலிங்கம் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டத... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்த நபா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை: விவசாயி கைது

கோபி அருகே தோட்டத்துக்குள் புகுந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செங்கோட்டையன் காலனியை சோ்ந்தவா் விஜய். பொறியியல் பட்டதா... மேலும் பார்க்க

நலிவடைந்த சென்னிமலை கைத்தறி போா்வை தயாரிப்பு : நெருக்கடியால் தொழிலைக் கைவிடும் நெசவாளா்கள்

-கே.விஜயபாஸ்கா்சென்னிமலை என்றாலே நினைவுக்கு வருவது முருகன் கோயிலும், கைத்தறி போா்வையும்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த கைத்தறி போா்வை உற்பத்தி தொழில் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ளதால் நெசவாளா்களில... மேலும் பார்க்க