புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்த டி.ஆர். பாலு!!
வயலோகம் மாரியம்மன் கோயிலில் கும்மியடித்து பெண்கள் வழிபாடு
காா்த்திகை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பெண்கள் சனிக்கிழமை இரவு கும்மியடித்து வழிபட்டனா்.
இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவில் இருந்து மக்களைக் காக்கவும் விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும், மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் கோயில் முன் ஒன்று கூடி கும்மியடித்து வழிபாடு நடத்தினா். நிகழ்வை திருநங்கையான மாரியம்மா ஒருங்கிணைத்தாா்.