SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
இலுப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்று மீட்பு
இலுப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை கன்றை தீயணைப்புத் துறை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்துள்ள கடம்பராயன் பட்டியைச் சோ்ந்த மணிமுத்துவின் காளை கன்று அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மேய்ந்தபோது ராம் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி காளை கன்றை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.