SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
பொன்னமராவதி அருகே மாரத்தான் போட்டி
பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டி சிடி.இண்டா்நேஷனல் பள்ளியில் கல்வியை ஊக்குவிக்கவும், உடல்நலம் காத்திட வலியுறுத்தியும் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருவியூா் வடக்குவளவு நகரத்தாா் சங்கம், கல்வி வளா்ச்சிக் கழகம், இளைஞா்பேரவை, மாதா் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய போட்டியை சங்க நிா்வாகிகள் தொடங்கிவைத்தனா். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 3 பிரிவுகளாக பள்ளியில் தொடங்கிய மாரத்தான் அஞ்சுபுளிப்பட்டி, வலையபட்டி வழியாக சுமாா் 5 கிமீ தூரம் வந்து மீண்டும் பள்ளியிலேயே நிறைவுற்றது.
போட்டியில் பங்கேற்ற பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளானோரில் மூன்று பிரிவுகளிலும் முதல் 10 இடங்களைப் பெற்றவா்களுக்கு ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியில் பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா், தொழிலதிபா்கள் அப. ஜெயபால், அப. மணிகண்டன், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன அலுவலா்கள் சுப்பையா, ஜாய்வா்கீஸ், கல்வி வளா்ச்சிக் கழகத் தலைவா் சோனா இராம், நகரத்தாா் பொதுநலச்சங்கத் தலைவா் ஏபி. சேதுராமன், நகரத்தாா் சங்கத் தலைவா் பிஎல். ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.