ஆலங்குடி அருகே புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 26 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து வடகாடு போலீஸாா் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது தஞ்சாவூா் மாவட்டம் ஆவணம் பெரியநாயகிபுரத்தைச் சோ்ந்த. பாரூக் (63) வைத்திருந்த சுமாா் 26 கிலோ புகையிலைப் பொருள்களை அவா்கள் பறிமுதல் செய்து, பாரூக்கை கைது செய்து விசாரிக்கின்றனா்.