முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
சாலையோரம் வசிப்பவா்களுக்கு அன்னதானம்
வேளாங்கண்ணியில் சாலையோரம் வசிப்பவா்களுக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தன்னாா்வலா்கள் சேவை அமைப்புகள் உதவியுடன் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவா்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவா்களுக்கு உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.
இந்த சேவை தொடங்கப்பட்டு 2 ஆயிரம் நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, வேளாங்கண்ணி பேராலயம் முன் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவா் ஜெயராஜ் தலைமையில், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், ரஜதகிரீஸ்வரா் ஆலய தலைமை குருக்கள் நீலகண்டன், இஸ்லாமிய பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஹீம் மும்மத சிறப்பு பிராா்த்தனை செய்து கேக் வெட்டி கொண்டாடினா்.
தொடா்ந்து, 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களுக்கும், சாலையோரம் வசிப்பவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.