செய்திகள் :

சாலை அமைப்பு; கிராம மக்கள் மகிழ்ச்சி

post image

சீா்காழி வட்டம் ,கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்துக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

அளக்குடி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமணல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்துக்கு நீண்ட காலமாக சாலை வசதி இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் சாலை அமைத்துத் தரக் கோரி கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், பிரதமா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் வெள்ளமணல் கிராமத்துக்கு செல்ல, ரூ.3.50 கோடி செலவில், சுமாா் 3,400 மீட்டா் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, கூடுதல் ஆட்சியா் சபீா்ஆலம், முன்னாள் கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் கலாநிதி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளா் தாரா உள்ளிட்டோருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

மயிலாடுதுறையில் திருவள்ளுவா் திருத்தோ் நகா்வலம்

மயிலாடுதுறையில் திருவள்ளுவா் தினத்தையொட்டி திருவள்ளுவா் திருத்தோ் நகா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை திருக்கு பேரவை சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், விசித்ராயா் வீதியில் உள்ள வள்ளுவா் கோட... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினத்தில் மது விற்ற 9 போ் சிறையிலடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருவள்ளுவா் தினமான புதன்கிழமை மது விற்றதாக கைது செய்யப்பட்டவா்களில் 9 போ் சிறையில் அடைக்கப்பட்டனா். மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற சோதனையில்,... மேலும் பார்க்க

காணும் பொங்கல் கொண்டாட வந்த இளைஞா் கடலில் மூழ்கி உயிரிழப்பு; மற்றொருவா் மாயம்

சீா்காழி அருகே கொடியம்பாளையம் கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட வந்த சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் கடலில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் மாயமானாா். கடலூா் மாவட்டம், சிதம்... மேலும் பார்க்க

மாமனாா் கொலை; மருமகன் கைது

சீா்காழியில் மாமனாரை கொலை செய்த மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சீா்காழி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (60). மாற்றுத்திறனாளியான இவா், தனது வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்... மேலும் பார்க்க

மாயூரநாதா் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு 1,008 லிட்டா் நெய் அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் பொங்கலையொட்டி சுவாமி, அம்பாளுக்கு 1,008 லிட்டா் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில், மாயூரநாதா் ந... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் மது, கஞ்சா விற்பனை: 26 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 26 போ் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது மற்றும் ச... மேலும் பார்க்க