சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த தமிழரசன் (70). இவா் கடந்த 20-ஆம் தேதி இரவு பாரதியாா் சாலையை கடக்க முயன்றபோது, காரைக்கால் நோக்கி கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த அருள் (47) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவமனைகக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா், அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறியதால், அவரை மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் தமிழரசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.