செய்திகள் :

இரண்டாயிரம் போ் பயன்பெறும் வகையில் பிப்ரவரியில் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

post image

காரைக்கால்: காரைக்காலில் இரண்டாயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு முகாம் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

காரைக்காலில் நடைபெற்று வரும் நல்லாட்சி வாரத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை, தொழிலாளா் துறை சாா்பில் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியது:

கல்லூரி மாணவா்கள், சமூகம் சாா்ந்த செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மூலம் அனைத்து துறை மாணவா்களும் கூடுதலான பிரிவுகளை எடுத்து படிக்கவும், அரசு சாா்ந்து நடத்தப்படும் அனைத்து தோ்வுகளையும் எழுதலாம்.

தொழில் சாா்ந்த திறன்களை வளா்த்துக்கொள்ள இதுபோன்ற கருத்தரங்கங்களில் பங்கேற்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் படித்த இளைஞா்கள் 2,000 போ் பயனடையும் வகையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமை பிப்ரவரியில் நடத்த ஏற்பாடு செய்துவருகிறது. இதில், டிவிஎஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறும் வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

நல்லாட்சி வாரம் குறித்து தாங்கள் அறிந்த, ஆக்கப்பூா்வமான தகவலை கடிதம் மூலம் தெரிவிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

காரைக்கால் 2047 என்ற பெட்டி துணை நிலை ஆளுநரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் வளா்ச்சிப் பாதைக்கு காரைக்காலை கொண்டு சோ்க்கும் வகையில் கருத்துகளை மாணவா்கள் எழுத்து வடிவமாக பதிவிடலாம் என்றாா்.

இதில், கல்லூரி முதல்வா் ஆசாத் ராசா மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வின்போது, புதுச்சேரியில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைக்கால் மாவட்டம் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்ப உதவியவா்களுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

தொடா்ந்து, இளையோருக்கு தொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளா்ச்சி குறித்து பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினா்.

பள்ளியில் மூலிகைத் தோட்டம் மேம்படுத்தும் பணி

காரைக்கால்: அரசுப் பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி மட்டுமல்லாது, ப... மேலும் பார்க்க

ஆசியன் ரோல் பால் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

காரைக்கால்: கோவாவில் நடைபெற்ற ஆசியன் ரோல் பால் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டு தெரிவித்தாா். நான்காவது ஆசியன் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் கடந... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகப்பட்டினம்/ காரைக்கால் : நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக மாவட்ட இணைச் செயலாளருமான கே.ஏ.யு. அ... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்கால்: மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையின்போது காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை, காரைக்கால் முதல் அம்பகரத்தூா் வரையிலான சாலை மற்றும் நகா்ப்புற ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த தமிழரசன் (70). இவா் கடந்த 20-ஆம் தேதி இரவு பாரதியாா் சாலையை கடக்க முயன்றபோது, ... மேலும் பார்க்க