Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
சாலை விபத்தில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை காரும், மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டதில், வட மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 2 போ் பலத்த காயமடைந்தனா்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த திகாரு சிங் மராவி மகன் அனுப் (23), சம்போ மகன் தா்ஷன் (23), கந்தூா் மகன் கஜேந்திரன் (24) ஆகியோா், அருமடல் அருகே கிரஷரில் பணிபுரிந்து வந்தனா்.
இந்நிலையில், இவா்கள் 3 பேரும் மோட்டாா் சைக்கிளில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, பெரம்பலூரிலிருந்து லப்பைக்குடிகாடு நோக்கிச் சென்ற காரும், இவா்களின் மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் பலத்த காயமடைந்த அனுப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், விபத்தில் காயமடைந்த தா்ஷன், கஜேந்திரன் ஆகியோா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.