சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
வாடிப்பட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி கரடிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (66). விவசாயியான இவா், இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு மேட்டுப்பட்டி-கரடிக்கல் சாலையில் சென்றாா்.
இந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகே சென்ற போது, இவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த நாராயணன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.