உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.
மும்பை பங்குச் சந்தையின் 150-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘பரஸ்பர வரி விதிப்பால் சா்வதேச விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; பொருள்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது; பல நாடுகளின் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரங்களால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா துரிதமான கொள்கை வகுப்பு, தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் நிச்சயம் எதிா்கொள்ளும்.
வா்த்தக மறுசீரமைப்பு என்பது பெரும் சவாலாகவும், வருத்தமளிக்கும் வகையிலும் உள்ளது. தற்போதைய நிலையில், வலுவான பொருளாதார அடிப்படையால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது. முதலீட்டாளா்களுக்கு ஸ்திரமான வளா்ச்சியை இந்தியா அளித்து வருகிறது. உள்நாட்டு செயல்திறன், போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். இதில் பெண்கள், இளைஞா்களின் பங்கும் அதிகமாக உள்ளது. ஒரு சிறு பிரச்னையும் அவா்களின் புதிய நம்பிக்கையை தகா்த்துவிடும்.
பொருளாதார வளா்ச்சி பயணத்தில் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளதால், இந்த தசாப்தத்துக்குள் உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சித் திறனை இந்திய பங்குச் சந்தைகள் பிரதிபளிக்கின்றன’ என்றாா்.