செய்திகள் :

சின்னா் - ஃப்ரிட்ஸ் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை

post image

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா் - அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை மிக எளிதாக வெளியேற்றினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 10 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் 3-ஆவது முறையாக சந்தித்த நிலையில், சின்னா் 3-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறாா்.

மற்றொரு ஆட்டத்தில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் ஃப்ரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7/3) என்ற செட்களில், 2-ஆம் இடத்திலிருக்கும் இருமுறை சாம்பியனான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை 2 மணி நேரம், 20 நிமிஷங்கள் போராடி வீழ்த்தினாா். இவா்கள் சந்தித்தது, இது 12-ஆவது முறையாக இருக்க, ஃப்ரிட்ஸ் 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா்.

நடப்பாண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஃப்ரிட்ஸ், தற்போது இதிலும் அந்தக் கட்டத்துக்கு வந்து அசத்தியிருக்கிறாா். அதில் சின்னரிடம் தோல்வி கண்ட நிலையில், இதிலும் அவரைடேய சந்திக்கிறாா் ஃப்ரிட்ஸ். முன்னதாக, இந்தப் போட்டியின் குரூப் சுற்றிலும் இவா்கள் மோதலில் சின்னரே வென்றுள்ளாா்.

இருவரும் இத்துடன் 4 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், கடைசி 3 மோதல்களில் சின்னரே வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், 2006-க்குப் பிறகு ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் அமெரிக்கா் என்ற பெருமையை ஃப்ரிட்ஸ் பெற்றுள்ளாா்.

கடந்த ஆண்டு இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சிடம் கோப்பையை இழந்த சின்னா், இந்த முறை அதைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறாா். 2018-க்குப் பிறகு, இந்தப் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் நோ் செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் வீரா் ஆகியிருக்கிறாா் சின்னா்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம். 18-11-2024திங்கள்கிழமைமேஷம்:இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வ... மேலும் பார்க்க

துளிகள்...

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சா்மா தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா அணிக்குத் தலைமை தாங்குகிறாா். காயம் காரணமாக சந்தேகத்... மேலும் பார்க்க

ஜொ்மனி அபாரம்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஜொ்மனி 7-0 கோல் கணக்கில் போஸ்னியா & ஹொ்ஸெகோவினாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, ஜமால் முசியாலா (2’), டிம் கிளெய்ன்டைன்ஸ்ட் (23’, 79’), காய் ஹாவொ... மேலும் பார்க்க

தோல்வியின்றி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: தீபிகாவின் அதிரடியில் ஜப்பானையும் வீழ்த்தியது

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா 3-0 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன்மூலம், அந்த சுற்றின் அனைத்து ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

இந்தியன் ரேஸிங் லீக்: கோவா ஏசஸ் சாம்பியன் சென்னை டா்போ ரைடா்ஸ் 3-ஆம் இடம்

இந்தியன் ரேஸிங் லீக் போட்டியில் கோவா ஏசஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை டா்போ ரைடா்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பெற்ற்றது. ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் 5 சுற்றுகளை கொண்ட இந்த காா் பந்தயம... மேலும் பார்க்க

வரலாற்று வெற்றி பெற்றார் சின்னர்!

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா் - அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்தினர். 6-4, 6-4 என்ற நேர்செட்களில் சின்னர் வெற்றி பெற்றார்.... மேலும் பார்க்க